ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வினின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் முதலிரண்டு இடங்களைத் தக்கவைத்துள்ளனர். மேற்கொண்டு மூன்றாம் இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தொடர்கிறார். அதேசமயம் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 4ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
அதேசமயம் அப்போட்டியில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறவிய டிராவிஸ் ஹெட் ஒரு இடம் பின் தங்கி 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதுதவிர்த்து பாகிஸ்தானின் சௌத் சகீப் 3 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தியும், மெல்போர்ன் டெஸ்டில் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் 3 இடங்கள் முன்னேறி 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுதவிர்த்து ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷாக்னே 3 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேசமயம் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தற்போது அவர் 907 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய பந்துவீச்சாளர் எனும் அஸ்வினின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2016ஆம் ஆண்டு 904 புள்ளிகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் முன்னேறம் கண்டதுடன், 2 மற்றும் 3ஆம் இடங்களைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு பாகிஸ்தான் டெஸ்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சன் 6 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் பின் தங்கி 10ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.