ஐபிஎல் அணிகளுக்கு கெடுபிடியை விதித்த பிசிசிஐ; முக்கிய வீரர்கள் பங்கேற்பார்களா?

Updated: Mon, Jan 02 2023 11:20 IST
Can BCCI ask IPL franchise to under-utilise Team India regulars? (Image Source: Google)

பிசிசிஐ வீரர்கள் உடல் தகுதி குறித்து வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு ஐபிஎல் அணிகளை கதி கலங்க வைத்துள்ளது. நடப்பாண்டில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.மேலும் ஐபிஎல் தொடர் முடிந்த உடனே ஒரு வாரத்தில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டம் இங்கிலாந்து நடைபெறுகிறது.

இதில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான பும்ரா, அஸ்வின், ஜடேஜா, முகமது சமி ஆகியோர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பது அவசியம். இதனை கருத்தில் கொண்டு பிசிசிஐ இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் என கருதப்படும் சிலர் ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக விளையாட கூடாது என்பதுதான்.

சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்த வேண்டும் வீரர்களுக்கு காயம் ஏற்படும் என ஐயம் ஏற்பட்டால் ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகிக் கொண்டு உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட போவது மும்பை அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான். மும்பை அணியில் முக்கியமான வீரராக இருப்பவர் பும்ரா. அவரை நம்பி தான் பல கணக்குகளை அந்த அணி நிர்வாகம் செய்துள்ளது.

தற்போது பும்ரா விளையாட கூடாது என பிசிசிஐ கூறிவிட்டால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா தீபக்சாகர் ஆகியோர் முக்கியமான வீரராக இருக்கிறார்கள். அவர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் பிசிசிஐ ஐபிஎல் போட்டியில் இருந்து அவர்கள் விலக வேண்டும் என ஒருவேளை கூறினால் ,அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பை பெருமளவில் பாதிக்கும்.

இதனால் ஐபிஎல் அணிகள் தற்போது கலக்கத்தில் இருக்கிறார்கள். ஐபிஎல் போட்டிகள் பிரபலம் ஆவது பும்ரா ,ஜடேஜா போன்ற வீரர்களின் செயல் ஆட்டத்தால் தான் என்று குறிப்பிட்டுள்ள ஐபிஎல் அணிகள், அவர்கள் விளையாடவில்லை என்றால் நிச்சயம் தொடரின் தன்மை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்களை நம்பி பல கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும் ஐபிஎல் அணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனினும் வீரர்களின் உடல் தகுதி மிகவும் முக்கியம் என்பதால் ஏதேனும் புதிய முறை கடைப்பிடிக்க வேண்டும் எனும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்றொரு அறிவிப்பும் ஐபிஎல் அணிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இந்திய அணிக்காக ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் அனைவரும் உடல் தகுதியும் பிசிசிஐயின் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணிக்கும். அவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்படுவது போல் தெரிந்தால் அவர்களை விளையாட கூடாது என்று அறிவிப்பு வெளியிடும். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஐபிஎல் அணிகள் முழித்து வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை