அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் - நாதன் லையன்!

Updated: Tue, Dec 19 2023 11:03 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 3 போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த வெற்றியில் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் நேத்தன் லயன் 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த 3ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ஆரம்பத்தில் மைதான பராமரிப்பாளராக இருந்த அவர் நாளடைவில் கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தால் ஸ்பின்னராக விளையாட தொடங்கிய அவர், இன்று ஷேன் வார்னேவுக்கு பின் 500 விக்கெட்டுகளை எடுத்த 2ஆவது ஆஸ்திரேலிய ஸ்பின்னர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார். முன்னதாக அந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தம்முடைய மிகப்பெரிய பயிற்சியாளராக இருந்து வருவதாக நேதன் லையன் வெளிப்படையாக பாராட்டினார்.

குறிப்பாக கேரியரின் ஆரம்பத்திலிருந்தே அஸ்வினை பார்த்து நிறைய அம்சங்களை கற்று வருவதாக தெரிவித்த அவர் ஓய்வுக்குப் பின் தாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து விளையாடிய காலங்களைப் பற்றி பேச உள்ளதாகவும் கூறியிருந்தார். இதனால் நெகிழ்ச்சியடைந்த அஸ்வின் ஓய்வுக்குப் பின் உங்கள் நாட்டில் சிட்னியிலும் எங்கள் நாட்டில் சென்னையின் மேற்கு மாம்பலத்திலும் ஒன்றாக அமர்ந்து பேசுவோம் என்று பதிலளித்து பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுமாறு லயனுக்கு வாழ்த்தையும் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து 500 விக்கெட்களை எடுத்த லையனுக்கு வரலாற்றின் மகத்தான ஸ்பின்னராக சாதனை படைத்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் பாராட்டினார். குறிப்பாக கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கோட் எனும் வார்த்தையை பயன்படுத்தி அவரை அஸ்வின் பாராட்டியது வைரலானது.

ஏனெனில் உலகின் டாப் 2 ஸ்பின்னர்களாக செயல்பட்டு வரும் அவர்களில் யார் முதலாவதாக 500 விக்கெட்டுகளை தொடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதில் தம்மை மிஞ்சிய லயனுக்கு எவ்விதமான பொறாமையும் இல்லாமல் அஸ்வின். “500வது விக்கெட்களை எடுத்த 8ஆவது பவுலர் மற்றும் 2ஆவது ஸ்பின்னர். வாழ்த்துக்கள் நேதன் லயன் நண்பா. கோட்” என்று பாராட்டியிருந்தார்.

 

இந்நிலையில் தம்மை பாராட்டிய அஸ்வின் விரைவில் 500 விக்கெட்டுகளை எடுக்கும் நாளுக்காக காத்திருப்பதாக நேதன் லயன் பதிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவில் “உங்களுடைய வாழ்த்துக்கள் உண்மையாகவே பாராட்டத்தக்கது அஸ்வின். நீங்களும் அதே மைல்கல்லை எட்டுவதை காண்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று பாராட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை