பிசிசிஐ காண்ட்ரெக்ட்டில் உம்ரான் மாலிக்கை சேர்க்க வேண்டும் - ரவி சாஸ்திரி!

Updated: Wed, May 18 2022 16:49 IST
‘Central contract for Umran Malik straightaway. Don’t let him go astray': Ravi Shastri (Image Source: Google)

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்சின் வேகப்புயல் உம்ரன் மாலிக் மற்றொரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து அவரை உடனே பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற செய்ய வேண்டும் அவரை விட்டு விடாதீர்கள் என்று ரவிசாஸ்திரி பிசிசிஐக்கு வலியுறுத்தியுள்ளார்.

3 விக்கெட்டுகளை உம்ரன் மாலிக் கைப்பற்றி மும்பை அணியின் தோல்விக்கு வித்திட்டார், காரணம் இஷான் கிஷன் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி 10 ஓவர்களில் 95/0 என்று கொண்டு சென்ற பிறகு இவரது புயல்வேகத்தை எதிர்கொள்ள முடியவில்லை. மேலும் ரோஹித் சர்மாவே ஹெல்மெட்டில் நங்கென்று வாங்கினார், இஷான் கிஷனுக்கு உம்ரன் மாலிக் ஓடி வரும்போதே கால்கள் நடுங்குவதைப் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து பேசிய ரவி சாஸ்திரி கூறிகையில், “உம்ரான் மாலிக்கிற்கு பிசிசிஐ மத்திய வீரர்கள் ஒப்பந்தம் வழங்க வேண்டும். அவரை முக்கிய வீரர்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள், மேலும் ஷமி, பும்ரா ஆகியோரிடமிருந்து அவர் கற்றுக்கொள்ளட்டும், அவர்கள் பயிற்சி செய்யும் விதம், அவர்கள் தங்கள் பணிச்சுமையை நிர்வகிக்கும் விதம் ஆகியவற்றை உம்ரன் மாலிக் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே அவரை வழிதவற விடாதீர்கள்.

உம்ரன் மாலிக் நாளுக்கு நாள் நன்றாக தேறி வருகிறார், இப்போது அவர் வீசும் லைனைப் பாருங்கள். வேகத்தை அவர் எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது, என்ன ஆனாலும் சரி, வேகத்தைக் குறைத்து லைன் அண்ட் லெந்தில் வீசு என்ற மோசமான அட்வைசை அவருக்கு யாரும் வழங்கக் கூடாது.

ஸ்டம்புகளில் வீசி தன் லெந்த், லைனை மாற்றினால் போதும் அவரை யாரும் தொடக்கூட முடியாது. புதிதாக யார் இறங்கினாலும் அவரை இவர் ஒரு வழி பண்ணி விடுவார் காரணம் இவர் வீசும் வேகம். தன் வேகத்தைக் குறைக்காமல் சரியான இடத்திலும் வீசத் தொடங்கினால் அவர் பெரிய சொத்து” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை