இந்தியா எப்போதுமே நல்ல கிரிக்கெட்டை விளையாடக் கூடியவர்கள் - தசுன் ஷனகா!

Updated: Tue, Sep 06 2022 11:33 IST
Image Source: Google

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா, தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் இந்தியா வெற்றிபெறவில்லை என்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது.

இதனால், இன்றைய போட்டியில் இந்தியா அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பேட்டிங் வரிசை மிகவும் பலமிக்கதாகத்தான் இருக்கிறது. இன்று ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இன்று சேர்த்து, பந்துவீச்சு துறையையும் ரோஹித் பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 175 ரன்களை சிறப்பாக துரத்தி வெற்றிபெற்றனர். இதில் யாரும் அரை சதம் அடிக்கவில்லை. பலர் 30+ ரன்களை அடித்து, தங்களது பேட்டிங் வரிசையின் வலிமையை வெளிகாட்டினர். இதனால், இலங்கை அணியில் 7,8 விக்கெட்கள் விழுந்தாலும் ரன் வேகத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்புகள் இருக்காது என்றுதான் கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்துப் பேசியுள்ள இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா சிறப்பாகத்தான் செயல்பட்டது. கடைசி நேரத்தில் சில தவறுகளால் தோற்றார்கள். இந்தியா எப்போதுமே நல்ல கிரிக்கெட்டை விளையாடக் கூடியவர்கள். எங்களுக்கு எதிரான போட்டிக்கு அவர்கள் நிச்சயம் முழு அளவில் தயாராக இருப்பார்கள். கடந்த போட்டியில் தோற்றதால், அவர்கள் அழுத்தங்களுடன் இருப்பார்கள் எனக் கூறிவிட முடியாது.

எங்களது யுக்தி, இரண்டு முன்று பெரிய பார்ட்னர்ஷிப்களை அமைப்பதுதான். கடந்த போட்டிகளில் இதனை செய்துதான் வென்றிருக்கிறோம். இந்திய அணிக்கு எதிராகவும் இதனை நாங்கள் செய்தால், நிச்சயம் வெற்றிபெறுவோம். இப்போது இந்திய அணியில் உள்ள இந்திய பந்துவீச்சாளர்களை அனுபவமற்றவர்கள் எனக் கூறிவிட முடியாது. ஐபிஎலில் விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றுள்ளனர். கடும் சாவல்களை அளிப்பார்கள். அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை