ஆஸ்திரேலிய தேசிய கீதத்திற்கு பதிலாக தவறுதலாக இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம் - காணொளி!

Updated: Sat, Feb 22 2025 17:00 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடல் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசி அதிரடியாக தொடங்கினார். இதனால் இப்போட்டியில் அவர் ரன்களைக் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஸ்மித்தும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் 15 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்துடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்துள்ளனர். 

இந்நிலையில் இப்போட்டிக்கு முன் தொடரின் ஏற்பாட்டாளர்கள் பெரும் தவறை செய்தனர். அதிலும் குறிப்பாக அந்த தவறானது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இப்போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் தேசிய கீதம் பாடுவதற்காக களத்தில் இருந்த நிலையில், முதலில் இங்கிலாந்து அணியின் தேசிய கீதம் இசைக்கப்பட நிலையில், அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட இருந்தது. 

ஆனால் அச்சமயத்தில் ஆஸ்திரேலிய தேசிய கீதத்திற்கு பதிலாக இந்திய தேசிய கீதம் தவறுதலாக இசைக்கப்பட்டது. இந்தக் காட்சியைக் கண்டு, கடாஃபி மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ஏற்பாட்டாளர்கள் சில நொடிகளில் தவறை உணர்ந்து, இந்திய தேசிய கீதத்தை நிறுத்திவிட்டு ஆஸ்திரேலிய தேசிய கீதத்தைத் இசைக்க தொடங்கினர். இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

England Playing XI: பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.

Also Read: Funding To Save Test Cricket

Australia Playing XI: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை