மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; சிக்கலில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள்!

Updated: Tue, Feb 25 2025 19:53 IST
Image Source: Google

 ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற இருந்த 7ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. மேலும் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ள இருந்தன. அதேசமயம் இப்போட்டியில் வெற்றிபெறும் அணியின் அரையிறுதி வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது. 

ஆனால் இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை நீடித்த கரணத்தால் போட்டியின் டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் தொடர் மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு இப்போட்டி நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது. ஆனால் இடைவிடாத மழை காரணமாக ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இப்போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதன்மூலம் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு தலா ஒரு புள்ளியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இரு அணிகளுக்கும் அரையிறுதிச்சுற்று வாய்ப்பானது கடினமாகியுள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா 2 போட்டிகளில் 3 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன. அதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் குரூப் பி பிரிவில் இருக்கும் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு தலா இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. இதனால் ஒருவேளை அந்த அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் குரூப் பி பிரிவில் இருந்து ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இனி வரும் போட்டிகள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை