வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாகத் தகவமைத்துக் கொண்டனர் - ஐடன் மார்க்ரம்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி இம்முறை பேட்டிங்கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் ஜோ ரூட் 37 ரன்களையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 ரன்காலையும், பென் டக்கெட் 24 ரன்களையும், ஜோஸ் பட்லர் 21 ரன்கலையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 179 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஆதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியிலும் ஸ்டப்ஸ், ரிக்கெல்டன் ஆகியோர் சோபிக்க தவற்இனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் - ஹென்ரிச் கிளாசென் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதில் கிளாசென் 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் வேன்டர் டுசென் 72 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 29.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இன்றைய போட்டியில் தங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டிக்கான மைதானம் தொடக்கத்தில் மெதுவாக இருந்தது, ஆனால் எங்கள் வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாகத் தகவமைத்துக் கொண்டனர். நாங்கள் எங்கள் லென்த்களை தக்கவைத்துக்கொண்டு நல்ல வழிகளில் பந்து வீசினோம். மேலும் இப்போட்டியில் ஜான்சென் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன் ஆரம்பத்திலேயே எங்களுக்காக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனை தொடர்ந்து செய்வதற்கான பல்வேறு வழிகளைக் கண்டுபிடித்து வருகிறார், மேலும் அவர் ரபாடாவுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டார். அதேசமயம் ஹென்ரிச் கிளாசென் கடந்த சில மாதங்களில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினார். அவரது ஃபார்மும் கேள்விக்குள்ளானது. ஆனால் அவர் உண்மையில் எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் சிறபபக செயல்பட்டுள்ளார். அதனால் அவர் தனது ஃபார்மை இழக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.