NZ vs PAK: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து மார்க் சாப்மேன் விலகல்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியானது 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி ஹாமில்டனில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி மிகப்பெரும் பின்னடையை சந்தித்துள்ளது.
அதன்படி அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் காயம் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது மார்க் சாப்மேன் காயத்தை சந்தித்தார். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவருக்கு முதல் தர காயம் இருப்பதுஉறுதியானது. இதன் காரணமாக அவர் இரண்டாவது போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் டிம் செய்ஃபெர்ட் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் டி20 தொடரில் டிம் செஃபெர்ட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மார்க் சாப்மேன் இல்லாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து ஒருநாள் அணி: டாம் லாதம் (கேப்டன்), முகமது அப்பாஸ், ஆதி அசோக், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேக்கப் டஃபி, மிட்ச் ஹே, நிக் கெல்லி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், பென் சியர்ஸ், டிம் சீஃபர்ட், நாதன் ஸ்மித், வில் யங்
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகிஃப் ஜாவேத், பாபர் ஆசாம், ஃபஹீம் அஷ்ரப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், இர்பான் நியாசி, நசீம் ஷா, சுஃபியான் முகீம், தயப் தாஹிர்.