'சென்னையில் சேஸிங் செய்யுரது கஷ்டம்' - ஈயான் மோர்கன்

Updated: Wed, Apr 14 2021 13:25 IST
Chennai pitch tough for chasing, says Morgan
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. 

இப்போட்டி முடிவுக்குப் பின் பேசிய கேகேஆர் அணி கேப்டன் ஈயான் மோர்கன், சென்னை பிட்சில் சேஸிங் செய்யுரது ரொம்ப கஷ்டம் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய மோர்கன், “இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஆல் அவுட் செய்து எங்களது பந்துவீச்சாளர்கள் அசத்தினர். மேலும் ஆட்டத்தின் தொடக்கம் எங்கள் நான்றாக இருந்தது. ஆனால் அதனை எங்களால் சரியாக பயன்படுத்த முடியவில்லை. 

நாங்கள் செய்த சில தவறுகளால் தோல்வியைத் தழுவினோ. இது மிகவும் வருத்தமான ஒன்று. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு போட்டியை வெற்றிபெற்றனர். அதேசமயம் சென்னை போன்ற பிட்ச்களில் சேஸிங் செய்வது மிகவும் கடினமான ஒன்று. 

அதிலும் மும்பை போன்ற வலிமையான அணியுடன் அது இன்னும் கடினமானதாக மறிவிட்டது. இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் எங்களது தவறுகளைச் சரிசெய்து மீண்டுவருவோம்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை