ஐபிஎல் 2022: சுரேஷ் ரேய்னாவை தேர்வு செய்யாதது குறித்து காசி விஸ்வநாதன்!

Updated: Tue, Feb 15 2022 13:36 IST
Image Source: Google

ஐபிஎல் 2022 தொடரில் விளையாட சுரேஷ் ரெய்னா தயாராக இருந்தாலும் சிஎஸ்கே உள்பட எந்த அணியும் அவரைத் தேர்வு செய்யவில்லை. கடந்த வருட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக விளையாடி 11 ஆட்டங்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் 35 வயது ரெய்னாவுக்குப் பதிலாக சிஎஸ்கேவுக்கு உத்தப்பா கிடைத்துவிட்டதால் ரெய்னாவை இந்தமுறை சிஎஸ்கே சிந்திக்கவில்லை. 

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5528 ரன்களுடன் 4ஆம் இடத்தில் உள்ளவர் ரெய்னா. 1 சதமும் 39 அரை சதங்களும் எடுத்துள்ளார். ரெய்னாவை எந்த அணியும் தேர்வு செய்யாததற்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். 

சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணிக்குத் தேர்வு செய்யாதது பற்றி அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த 12 வருடங்களாக சிஎஸ்கே அணிக்காகத் தொடர்ந்து நன்கு விளையாடி வந்தவர் ரெய்னா. அவர் அணியில் இல்லாதது கஷ்டமாகத்தான் உள்ளது. வீரர்களின் சமீபத்திய ஆட்டத்திறமையைக் கொண்டுதான் எந்த அணியும் உருவாக்கப்படும். இதனால் ரெய்னா, சிஎஸ்கே அணிக்குப் பொருந்தமாட்டார் என எண்ணினோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::