‘தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கேவின் கவுரவம்!

Updated: Sun, Oct 31 2021 17:23 IST
Image Source: Google

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஈட்டி எறிதல் சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்தன. 

அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் அணியில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை அறிவித்திருந்தது.

இந்நிலையில் டெல்லியில் இன்று நடந்த விழாவில், நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை கௌரவிக்கும் விதமாக 8758 என்ற எண் பொறிக்கப்பட்ட சிஎஸ்கே ஜெர்சி ஒன்றும், ரூ.1 கோடிக்கான காசோலையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் பரிசளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் “நீரஜின் அபார சாதனைக்காக ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது. தடகள போட்டிகளில் பதக்கம் (தங்கம்) வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம், அடுத்த தலைமுறைக்கு ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார்.

Also Read: T20 World Cup 2021

87.58 என்பது இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு எண், இந்த சிறப்பு ஜெர்சியை நீரஜுக்கு வழங்குவது எங்களுக்கு ஒரு மரியாதை. அவர் தேசத்திற்கு மேலும் பெருமை சேர்க்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை