ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, May 10 2023 12:12 IST
Image Source: CricketNmore

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்ற இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவில் அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் எந்த நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அந்தவகையில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் ஆட்டத்தில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

சிஎஸ்கே அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளுடன் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் தனது இடத்தை அதிகரித்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ், டேவன் கான்வே ஆகியோர் இந்த போட்டியிலும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தீவிரமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நடு வரிசையில் அஜிங்க்ய ரஹானே, ஷிவம் துபே ஆகியோர் பலம் சேர்த்து அணிக்குத் தூண்களாக உள்ளனர். கடந்த சில ஆட்டங்களாக தனது மட்டைத் திறனை சரியாக வெளிப்படுத்தாத அம்பதி ராயுடு, மொயின் அலி ஆகியோர் பேட்டிங்கில் பிரகாசிக்கக்கூடும். பெரும்பாலும் 7 அல்லது 8ஆவது வீரராக களமிறங்கும் தோனி, இந்தஆட்டத்தில் முன்கூட்டியே களமிறங்கவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதேபோல் பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது உயர்மட்டத் திறனை வெளிப்படுத்தி விக்கெட்களைச் சாய்த்தனர். அதேபோல் கடைசி ஓவர்களில் அபாரமாக பந்துவீசி பதிரனா 3 விக்கெட்களை வேட்டையாடி எதிரணி வீரர்களை அச்சுறுத்தினார். அவரது அதிரடி பந்துவீச்சு இந்த ஆட்டத்திலும் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.

அதேநேரத்தில் டெல்லி அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளைப் பெற்று களம் காண்கிறது. கடைசியாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஆட்டத்தில் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றிருந்தது. தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான பிலிப் சால்ட் அருமையாக விளையாடி 87 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். அவருடன் பேட்டிங்கில் கேப்டன் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அக்சர் படேல், மணீஷ் பாண்டே ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர்.

பந்துவீச்சில் கலீல் அகமது, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் எதிரணியை அச்சுறுத்தி வருகின்றனர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் டெல்லி அணி வீரர்கள் தங்களது உயர்மட்டத் திறனை வெளிப்படுத்துவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும்பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் மிக முக்கியமானது என்பதால், ஆட்டத்தில் அனல்பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 27
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 17
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 10

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கே), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர் (கே), பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரைலி ரூஸோவ், மணீஷ் பாண்டே, அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: டெவோன் கான்வே
  • பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, ரிலீ ரோசோவ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஹா, மிட்செல் மார்ஷ், அக்சர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரன.

*இந்த பேண்டஸி லெவன் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியைத் தேர்ந்தெடுக்கும்போது, குறிப்பிட்டுள்ள புள்ளிகளைக் கருத்தில் கொண்டு உங்கள் சொந்த முடிவை எடுங்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை