ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Sep 18 2021 13:01 IST
Image Source: Google

இந்தியாவில் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், வீரர்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்று அச்சத்தால் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. 

நாளை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்திய அணி, மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையே நடப்பு சீசனில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளதால், இப்போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் : சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • நேரம் : இரவும் 7 மணி
  • இடம் : சேக் சயீத் மைதானம், அபுதாபி

போட்டி முன்னோட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால், நிச்சயம் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி 5 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 

மேலும் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டூ பிளெசிஸ், மொயீன் அலி ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது. மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகியோரும் ஃபினிஷர் ரோலில் மகேந்திர சிங் தோனி, பிராவோ, சாம் கரன் ஆகியோரும் அணிக்கு பக்கபலமாக உள்ளனர். 

பந்துவீச்சாளர்களில் தீபக் சஹார், லுங்கி இங்கிடி, ஜோஷ் ஹசில்வுட், ஷர்துல் தாக்கூர், பெஹண்ட்ராஃப், இம்ரான் தாஹீர் ஆகியோர் உறுதுணையாக உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் 

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்திய அணி, நடப்பு சீசனில் சென்னை அணிக்கெதிரான முதல் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது. தற்போது அதே முனைப்புடன் இப்போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணியில் குயின்டன் டி காக், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் உச்சகட்ட ஃபார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை தருகிறது. 

பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருடன் ராகுல் சஹார் நிச்சயம் எதிரணிக்கு தலைவலியாக அமைவார் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர் 

  • மோதிய ஆட்டங்கள் - 33
  • சிஎஸ்கே - 13
  • மும்பை இந்தியன்ஸ் - 20

உத்தேச அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் -
ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, கீரேன் பொல்லார்ட், ஜேம்ஸ் நீஷாம், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன், குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ் - சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ்
  • ஆல் -ரவுண்டர்கள் - மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா
  • பந்துவீச்சாளர்கள் - ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹர்

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை