ஐபிஎல் 2021: கெய்க்வாட், டூ பிளெஸிஸ் அபாரம்; மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே!

Updated: Wed, Apr 28 2021 23:16 IST
Chennai Super Kings won by 7 wkts
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

இதையடுத்து கேப்டன் டேவிட் வார்னர், மனிஷ் பாண்டே ஆகியோரது அசத்தல் அரைசதத்தால், 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை குவித்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களையும், டேவிட் வார்னர் 57 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே தரப்பில் லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், ஃபாப் டூ பிளெஸிஸ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து வெற்றிக்கு அடித்தளமிடத்து. 

இதில் இருவரும் அரைசதம் விளாச சிஎஸ்கேவின் வெற்றி ஏறத்தாழ உறுதியானது. பின்னர் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரூதுராஜ் கெய்க்வாட் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த மொயின் அலி மற்றும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த டூ பிளெஸிஸ் ஆகியோரும் ரஷித் கானிடம் விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ரெய்னா - ஜடேஜா இணை சென்னை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இதனால் 18.3 ஓவர்களிலேயே சென்னை அணி வெற்றி இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் மூலம் நடப்பாண்டு ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை