BAN vs IND, 2nd Test: சச்சின், டிராவிட் வரிசையில் இணைந்தார் புஜாரா!

Updated: Fri, Dec 23 2022 12:17 IST
Image Source: Google

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப்பெற்றது. இந்நிலையில் தற்போது, இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டிக்கான டாஸை வென்ற வங்கேதச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில், மமினுல் ஹக் 84 (157) மட்டுமே சிறப்பாக விளையாடினார். மற்றவர்களில் ஷான்டோ 24 (57), லிடன் தாஸ் 25 (26), முஷ்பிகுர் ரஹீம் 26 (46) ஆகியோரை தவிர யாரும் 20+ ரன்களை கூட தொடாததால், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227/10 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உமேஷ் யாதவ் 4/25, அஸ்வின் 4/71 ஆகியோர் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் கேஎல் ராகுல் 10 (45), ஷுப்மன் கில் 20 (39) இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் தைஜுல் இஸ்லாமிடம் வீழ்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து 24 ரன்கள் எடுத்திருந்த புஜாராவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் இப்போட்டியில், புஜாரா 16 ரன்களை சேர்த்தபோது, டெஸ்டில் 7000 ரன்களை கடந்த 8ஆவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். புஜாரா தற்போதுவரை 98 டெஸ்ட்களில், 167 இன்னிங்ஸ் விளையாடி 44.90 சராசரியுடன் இந்த ரன்களை அடித்திருக்கிறார். இதில் 34 அரை சதம், 19 சதங்கள், 3 இரட்டை சதங்களும் அடங்கும்.

இப்பட்டியளில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 12,265 ரன்களுடன் இரண்டாம் இடத்தையும், சுனில் கவாஸ்கர் 10,122 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த வீரர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் (15,921)
  • ராகுல் டிராவிட் (13,265)
  • சுனில் கவாஸ்கர் (10,122)
  • விவிஎஸ் லக்ஷ்மனன் (8,781)
  • விரேந்திர சேவாக் (8,503)
  • விராட் கோலி (80,94)
  • சௌரவ் கங்குலி (7,212)
  • சட்டேஷ்வர் புஜாரா (7,008)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை