இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - கிறிஸ் கெயில்!

Updated: Thu, Jun 29 2023 22:45 IST
Chris Gayle picks Top 4 Semifinalists of this World Cup 2023! (Image Source: Google)

ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒருசில மாதங்களே இருப்பதால் அதற்குள் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை அண்மையில் மும்பையில் பிசிசிஐ மற்றும் ஐசிசி இரு தரப்பும் இணைந்து வெளியிட்டது. இந்த வருட உலககோப்பையில் அக்டோபர் 15ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. 

கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளிக்கக்கூடிய மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் சிரமம் இன்றி பலரும் பார்க்கலாம். அதற்குள் அகமதாபாத் மைதானத்திற்கு அருகே இருக்கும் ஹோட்டல் அறைகளின் விலை அக்டோபர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் விண்ணளவிற்கு உயர்ந்திருக்கிறது. சராசரியாக 3000 ரூபாய்க்கு இருக்கும் ஹோட்டல் அறைகள் தற்போது 30 ஆயிரத்தையும் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில ஹோட்டல்களில் ஒரு லட்சம் வரை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிறிஸ் கையில் அண்மையில் பேசிய பேட்டியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பற்றி பேசினார். அப்போது, “கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க உலகமே ஆவலோடு காத்திருக்கும். இது போன்ற ஒரு போட்டியில் கிடைக்கும் வருமானமே மொத்த ஐசிசி தொடரையும் நடத்தும் அளவிற்கு இருக்கும். 

குறிப்பாக டிவி உரிமம் பெற்றவர்கள் இந்தியா-பாகிஸ்தான் ஒரு போட்டியில் மட்டுமே மொத்த செலவிலும் பெரும் பகுதியை எடுத்து விடுவர். அந்த அளவிற்கு போட்டியில் மட்டும் பரபரப்பு இல்லாமல் வருமானத்திலும் உச்சம் இருக்கும். இதுபோன்ற போட்டிகள் நிறைய வரவேண்டும். இந்திய அணி இம்முறை தங்களது சொந்த நாட்டில் விளையாடுகிறது. 

ஆகையால் அவர்களுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். 10 வருடங்கள் கோப்பை இல்லாத குறையை தீர்க்க வழியாகவும் இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணியும் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கிறோம். ஆனால் பணத்தின் அளவில் பின்தங்கி இருப்பதால் எவரும் கண்டு கொள்ளவில்லை. விரைவாக இந்த நிலை சரியாக வேண்டும் என்று விரும்புகிறேன். 

இந்த வருடம் உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இதில் இந்திய அணி கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கிறேன். தங்களது சொந்த நாட்டில் அவர்களைப் போன்ற பலம் மிக்கவர்கள் எவரும் இல்லை” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை