கரோனா தடுப்பூசி: பிரதமருக்கு நன்றி தெரிவித்த கெய்ல்!

Updated: Fri, Mar 19 2021 15:16 IST
Chris Gayle (Image Source: Google)

கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன. அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த  மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேசமயம் கரோனா தடுப்பூசிகள் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகள், தேவையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜமைக்கா நாட்டுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிறிஸ் கெயில் வெளியிட்டுள்ள காணொலியில், “பிரதமர், இந்தியத் தூதரகம் , இந்திய மக்கள் என அனைவருக்கும் நன்றி. ஜமைக்காவிற்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கிய உங்கள் அனைவருக்கும் என் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டிருந்த காணொலி, சமூக வலைதளங்களில் வைரலானது. 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை