டி20 கிரிக்கெட்டில் 14ஆயிரம் ரன்கள் - சாதனை படைத்த கீரன் பொல்லார்ட்!
Kieron Pollard Record: கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர ஆல் ரவுண்டர் கீரன் பொல்லார்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சிறப்பு சாதனையை படைத்துள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் 2025 தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்படாஸ் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 45 ரன்களையும், கதீம் அலீன் 41 ரன்களையும், ரோவ்மன் பாவெல் 31 ரன்களையும் சேர்த்தனர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் காலின் முன்ரோ 67 ரன்களையும், கேப்டன் நிக்கோலஸ் பூரன் 65 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பார்படாஸ் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கீரன் பொல்லார்ட் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த வகையில் இப்போட்டியில் கீரன் பொல்லார்ட் 19 ரன்களைச் சேர்த்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 14ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் அவர் பெற்றுள்ளார்.
இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸீன் ஜம்பவான் கிறிஸ் கெயில் டி20 கிரிக்கெட்டில் 14,562 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். கீரோன் பொல்லார்டைப் பற்றிப் பேசினால், அவர் உலகம் முழுவதும் உள்ள லீக்குகளில் விளையாடுகிறார், மேலும் இதுவரை தனது வாழ்க்கையில் மொத்தம் 711 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 632 இன்னிங்ஸ்களில் மொத்தம் 13,981 ரன்களை 31.63 சராசரியாகவும் 150.91 ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
- கிறிஸ் கெய்ல் - 463 போட்டிகளில் 14,562 ரன்கள்
- கீரோன் பொல்லார்ட் - 712 போட்டிகளில் 14,000 ரன்கள்
- அலெக்ஸ் ஹேல்ஸ் - 507 போட்டிகளில் 13,931 ரன்கள்
- டேவிட் வார்னர் - 424 போட்டிகளில் 13,595 ரன்கள்
- ஷோயப் மாலிக் - 557 போட்டிகளில் 13,571 ரன்கள்