West Indies vs Australia 3rd T20I: சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் எனும் பெருமையை அந்த் அணி கேப்டன் ஷாய் ஹோப் பெற்றுள்ளார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 102 ரன்களையும், பிராண்டன் கிங் 62 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிம், ஆடம் ஸாம்பா மற்றும் மிட்செல் ஓவன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் சதமடித்து அசத்தியதுடன் 37 பந்துகளில் 6 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் என 102 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய மிட்செல் ஓவன் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், அணியின் கேப்டன் ஷாய் ஹோப் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஷாய் ஹோப் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இந்த சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த ஐந்தாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் எனும் பெருமையையும் ஷாய் ஹொப் பெற்றுள்ளர். இதற்கு முன் கிறிஸ் கெயில், எவின் லூயிஸ், ஜான்சன் சார்லஸ், ரோவ்மன் பாவெல் ஆகியோர் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் சதமடித்துள்ளனர். அதேசமயம் ஷாய் ஹோப் ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News