துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆன கருண் நாயர் - காணொளி!

Updated: Wed, Apr 16 2025 20:50 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கருண் நாயர் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 34 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதிலும் குறிப்பாக இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அதன்படி இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை சந்தீப் சர்மா வீசிய நிலையில், அந்த ஓவரைன் முதல் பந்தை எதிர்கொண்ட அபிஷேக் போரல் முயன்றார், ஆனால் பந்து அவரது பேடைத் தாக்கி பாயிண்டை நோக்கிச் சென்றது. இதனால் கருண் நாயர் உடனடியாக ஒரு சிங்கிள் எடுக்கும் முயற்சியில் ஓடிய நிலையில், போரெல் பாதி வழியில் திருப்பி அனுப்பினார்.

அப்போது, ​​அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த வனிந்து ஹசரங்கா விரைவாக பந்தை எடுத்து நான்-ஸ்ட்ரைக்கர் முனையை நோக்கி வீசினார், அதை சந்தீப் சர்மா பிடித்து விரைவாக ஸ்டம்பை தகத்தார். ஒரு கணம் கருண் நாயர் க்ரீஸை எட்டினார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நூழிலையில் அவர் தனது விக்கெட்டை இழந்திருந்தார். இந்நிலையில் கருண் நாயர் விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Sports Kannada (@starsportskan)

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கே), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், நிதிஷ் ராணா, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே

இம்பேக்ட் வீரர்கள் - ஷுபம் துபே, யுத்வீர் சிங் சரக், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குணால் சிங் ரத்தோர்

டெல்லி கேபிடல்ஸ் பிளேயிங் லெவன்: ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா.

Also Read: Funding To Save Test Cricket

இம்பேக்ட் வீரர்கள் - முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, சமீர் ரிஸ்வி, டோனோவன் ஃபெரீரா, திரிபுரானா விஜய்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை