அரைசதமடித்த ஹர்மன்ப்ரீத் கவுர்; ஆஸ்திரேலியாவுக்கு 155 டார்கெட்!
காமன்வெல்த் தொடரில் மகளிர் கிரிக்கெட் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் மந்தனா 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய யஸ்திகா பாட்டியாவும் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 48 ரன்களில் ஆட்டமிழந்து, 2 ரன்களில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையடை அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதமும் கடந்து அசத்தினார். அதன்பின் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜெஸ் ஜெனசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.