BAN vs IND, 1st Test: முதல் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்?

Updated: Tue, Dec 13 2022 19:47 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 1-2 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா காயத்தால் விலகியுள்ளார். இதனால் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் நாளை போட்டி தொடங்கும் நிலையில் வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் உம்ரான் மாலிக் வீசிய பந்து, ஷாகிப் அல் ஹசன் விலா எழும்பில் தாக்கியது. உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, அப்போது ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரியவந்தது. இந்நிலையில் அவர் இன்று பயிற்சி மேற்கொண்டபோது, வலி இருப்பதாக உணர்ந்தார்.

இதனால் பயிற்சியில் இருந்து விலகி எக்ஸ்-ரே எடுப்பதற்கான மருத்துவமனை சென்றுள்ளார். அதன்பின் முடிவுகளின் அடிப்படையில் ஷகிப் அல் ஹசன் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என வங்கதேச அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை