நியூசிலாந்து ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய டெவான் கான்வே, ஃபின் ஆலன்!
சமீபகாலங்களில் டி20 கிரிக்கெட் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்களும் உலகளவில் நடைபெறும் டி20 பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் விளையாட அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. முன்பெல்லாம் வீரர்கள் தங்களுக்கு எந்தவொரு சர்வதேச போட்டிகளும் இல்லாத சமயத்தில் தான் இதுபோன்ற டி20 பிரான்சைஸ் லீக் தொடரில் விளையாடி வந்தனர்.
ஆனால் சமீப காலங்களில் பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் அதிக பணம் ஈட்டமுடியும் என்ற காரணத்தால் பெரும்பாலான வீரர்கள் தங்கள் சொந்த நாட்டிற்காக விளையாடாமல் லீக் போட்டிகளில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கான சரியான உதாரணமாக கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்தில் உலக ஜாம்பவானாக போற்றப்பட்ட வெஸ்ட் இண்டீஸை நம்பால் கூறமுடியும்.
ஆரம்ப காலங்களில் உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்ததுடன் அடுத்தடுத்து இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியால், தற்சமயம் உலகக்கோப்பை தொடரில் விளையாடகூட தகுதிப்பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணம் அணியி நட்சத்திர வீரர்கள் தங்கள் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் டி20 லீக் போட்டிகளில் விளையாடுவது தான் காரணம்.
தற்சமயம் அந்த வரிசையில் நியூசிலாந்து வீரர்களும் பயணிக்க தொடங்க ஆரம்பித்துவிட்டனர். ஏற்கெனவே அந்த அணியின் நட்சத்திர வீரர் டிரென்ட் போல்ட் அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதுடன், தேவைப்படும் நேரங்களில் மட்டும் தேசிய அணிக்காக விளையாடிவிட்டு, மீதமிருக்கும் நேரங்களில் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவரது வரிசையில் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வே, ஃபின் ஆலனும் இணைந்துள்ளனர்.
இருவரும் சர்வதேச அளவிலான பிரான்சைஸ் டி20 லீக் தொடர்களில் விளையாடிவரும் சூழலில், அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இருவரும் சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காகவும் விளையாடவுள்ளனர். ஆனால் அவர்கள் தேவைப்படும் நேரங்களில் அணியில் இருந்து விலகி பிறநாட்டு டி20 லீக் தொடர்களில் பங்கேற்கும் வகையில் தங்கள் மத்திய ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளனர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
என்னதான் வீரர்கள் தங்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்து சர்வதேச போட்டிகளில் விளையாடினாலும், அவர்களால் வேண்டிய நேரங்களில் சர்வதேச போட்டியில் இருந்து விலகி மற்ற டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க இதுபோல் செய்வது, அணிகளின் நிலை தன்மையை கடுமையாக பாதிக்கும். இதனால் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.