நான் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது இதன் காரணமாக தான் - ஆடம் ஸாம்பா விளக்கம்!

Updated: Thu, Apr 11 2024 15:40 IST
நான் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது இதன் காரணமாக தான் - ஆடம் ஸாம்பா விளக்கம்! (Image Source: Google)

ஐபிஎல் என்றழைக்கப்பட்டும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அதற்கேற்றவகையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.  

அந்த வரிசையில் ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலேயே கோப்பையை வென்று சாதித்துக்காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருவதுடன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களினால் அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இதனால் அந்த அணி தென் ஆப்பிரிக்காவின் கேஷவ் மகாராஜை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. 

இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஏன் விலகினேன் என்பதற்கான காரணத்தை ஆடம் ஸாம்பா விளக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடததற்கு பல காரணங்கள் உள்ளன. அதேசமயம் நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி நான் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சரியான ஃபார்மில் இல்லை என்பதே முக்கிய காரணம் என நினைக்கிறேன். 

கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருந்ததால் நான் அந்த சீசன் முழுவதும் தொடரில் இடம்பெற்று விளையாடினேன். அது எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது. எனவே இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் விளையாட முயற்சிக்க வேண்டும் என்ற சிறந்த எண்ணம் எனக்கு இருந்தது.  ஆனால் என்னால் உண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறந்த பதிப்பை வழங்க முடியாது என்று உணர்ந்தேன், மேலும் உலகக் கோப்பையை தொடரை எதிர்நோக்கி உள்லதால், அதுதான் எனக்கு மிகவும் முக்கியமானது.

அதன் காரணமாக நான் எனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என முடிவுசெய்தேன். மேலும் அணியில் இடம்பிடிக்க நான் போராடிவரும் நிலையில், என்னால் ஐபிஎல் தொடருக்காக 9 வாரங்களை இந்தியாவில் செலவளிக்க முடியாது. ஒருவேளை நான் இத்தொடரில் பங்கேற்றிருந்தாலும் என்னால் தொடர்ச்சியாக 14 போட்டிகளிலும் விளையாடி இருக்க முடியுமா என்பது கேள்விகுறி தான். 

ஏனெனில் நான் தேவைக்கேற்ப அணிக்குள் உள்ளேயும் வேளியேயும் இருந்துள்ளேன். அதனால் இந்த சீசனில் நான் விளையாடி இருந்தாலும் 4 அல்லது 5 போட்டிகளில் மட்டுமே எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். அதனால் நான் எனது குடும்பத்திற்கு முக்கியதுவம் கொடுத்து, சிறுது ஓய்வெடுக்க எண்ணினேன். மேலும் எனது உடற்தகுதிக்கு முதலிடம் கொடுத்து மீண்டும் களத்திற்கு திரும்புவது நல்லது என எண்ணினேன்.

என்னைப் பொறுத்தவரை இது எளிதான முடிவு அல்ல, ஏனென்றால் ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய பிறகு, ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? அடுத்த முறை நீங்கள் ஐபிஎல் செல்ல விரும்பினால் என்ன நடக்கும்? போன்ற சிந்தனைகள் இருந்தது. ஆனால் நான் அந்த முடிவை எடுத்தவுடன் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை, ஏனெனில் நான் எடுத்த முடிவு சரியானது என எனக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை