பயிற்சி ஆட்டம் : ராகுல், ஜடேஜா அபார ஆட்டத்தால் தப்பித்த இந்தியா!

Updated: Tue, Jul 20 2021 22:54 IST
Image Source: Google

இந்தியா - கவுண்டி லெவன் அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி ஆட்டம், டர்ஹாமில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து களமிறக்கிய இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக கேப்டன் ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரா, விஹாரி என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் - ரவீந்திர ஜடேஜா இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் இழப்பை தடுத்தது. இதில் அபாரமாக விளையாடிய கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். 

பின்னர் 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல்.ராகுல் ரிட்டையர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜடேஜாவும் தனது பங்கிற்கு 75 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் முகமது சிராஜ் ஒரு ரன்னுடனும், ஜஸ்பிரீத் பும்ரா 3 ரன்னுடம் களத்தில் உள்ளனர். 

கவுண்டி லெவன் அணி தரப்பில் கிரேக் மைல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை