கரோனாவால் முன்னாள் இந்திய வீரர் உயிரிழப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Sun, May 16 2021 14:54 IST
Image Source: Google

சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ நடுவருமானவர் ராஜேந்திர சிங் ஜடேஜா. இவர் 1975-86ஆம் ஆண்டு காலகட்டங்களில் சௌராஷ்டிரா அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்து வந்தார். 

இந்நிலையில்,  கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

இருப்பினும் நேற்றைய தினம் ராஜேந்திர சிங் ஜடேஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பு குறித்த தகவலை சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் உறுதிசெய்து, தங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து எஸ்சிஏ அறிக்கையில், "ராஜேந்திர சிங் ஜடேஜா மிகச்சிறந்த கிரிக்கெட் திறன்களைக் கொண்ட மனிதர். கிரிக்கெட்டில் அவரது அர்ப்பணிப்பும் பங்களிப்பும் என்றென்றும் நினைவில் வைக்கப்படும். அவரது இழப்பு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை