BAN vs AFG: ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு கரோனா உறுதி!

Updated: Tue, Feb 15 2022 21:25 IST
Image Source: Google

வங்கதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 

இதில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் அணியில் 8 வீரர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின்படி, 8 வீரர்கள் உள்பட உதவியாளர்கள் 3 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அணியிலுள்ள மற்ற வீரர்கள் சில்ஹெட்டில் பயிற்சியைத் தொடங்கினர். ஒருவாரத்துக்குப் பிறகு, ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள சாட்டோகிராமுக்குச் செல்லவுள்ளனர். 

ஒருநாள் ஆட்டங்கள் பிப்ரவரி 23, பிப்ரவரி 25 மற்றும் பிப்ரவரி 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. டி20 தொடர் மார்ச் 3 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் மிர்பூரில் நடைபெறவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::