சிபிஎல் 2021: பிரண்டன் கிங் அதிரடியால் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Thu, Sep 09 2021 11:50 IST
Image Source: Google

சிபிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கயானா அமேசன் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணி 17 ரன்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் கிங் அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி  6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. கிங்ஸ் அணி தரப்பில் ஜேவர் டைலர், வஹாப் ரியாஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதைத்தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கிங்ஸ் அணி தொடக்கத்திலேயே பிளெட்சர், டூ பிளெசிஸ், சமித் படேல் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் - டிம் டேவிட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் கணக்கை உயர்த்தினர். 

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 47 ரன்களை சேர்த்திருந்தார்.

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

இதன் மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை