சிபிஎல் 2021: செயிண்ட் லீசியா கிங்ஸை வீழ்த்திய தலாவாஸ்!

Updated: Fri, Sep 10 2021 10:34 IST
Image Source: Google

சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணி, செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற தலாவாஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய தலாவாஸ் அணிக்கு கென்னர் லூயிஸ் அபாரமான தொடக்கத்தை கொடுத்தார். இதில் அரைசதமடித்த கென்னர், 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ப்ரூக்ஸ் 34, ரஸ்ஸல் 31 ரன்களைச் சேர்த்து அசத்தினர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜமைக்கா தலாவாஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களைச் சேர்த்தது. கிங்ஸ் அணி தரப்பில் காதீம் அல்லெய்ன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய கிங்ஸ் அணியில் கேப்டன் டூ பிளெசிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே ஃபிளட்சர் - மார்க் டியல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் ஃபிளட்சர் 30 ரன்களிலும், மார்க் டியல் 33 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்த வந்த வீரர்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், 18.1 ஓவரிலேயே கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் ஜமைக்கா தலாவாஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::