சிபிஎல் 2021: கிரிக்கெட்ன்மோரின் பார்ட்னர்ஷிப்பை நீட்டித்த செயிண்ட் லூசியா கிங்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுகளுக்கு மத்தியில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தொடரிக் 50 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டும் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்தாண்டு சிபிஎல் தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, நடப்பாண்டிற்கான தொடரில் புதிய ஜெர்சியுடன் களமிறங்குகிறது. அதேசமயம் அணியின் ஸ்பான்ஷர்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையிலான செயின் லூசியா கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்ஷராக இண்டிபெட்டும், பிரின்சிபல் ஸ்பான்ஷர்களாக கிரிக்கெட்ன்மோர் (Cricketnmore), செயிண்ட் லூசியா டூரிசம், பிகேடி டையர்ஸ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பையும் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து செயிண்ட் லூசியா கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் மேனன் கூறுகையில், "கிரிக்கெட்மோர் உடனான எங்கள் பார்ட்னர்ஷிப்பை நீட்டிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் எங்கள் ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்துவதற்கான எங்கள் உந்துதலில் கிரிக்கெட்ன்மோர் ஒரு முக்கிய அங்கமாகும். நம்முடையது ஒரு கூட்டு உறவு. கிரிக்கென்மோர் பல மொழிகளில் கிரிக்கெட் குறித்த அனைத்து செய்திகளையும் வெளியிட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
நீண்டகால பார்ட்னர்ஷிப் குறித்து, கிரிக்கெட்ன்மோர் நிறுவனர் சாஹிர் உஸ்மான் கூறுகையில், "செயின்ட் லூசியா கிங்ஸுடன் தொடர்ந்து 2 வது சிபிஎல் சீசனுக்காக ஸ்பான்ஷராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பார்ட்னர்ஷிப் அனைத்து கிரிக்கெட்ன்மோர் மற்றும் சிபிஎல் ரசிகர்களுக்கும் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் பிரத்தியேகமான மற்றும் சிறப்பு உள்ளடக்கத்தை வழங்கும்” என்று தெரிவித்தார்.
செயிண்ட் லூசியா கிங்ஸின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் கூறுகையில், "நான் தனிப்பட்ட முறையில் மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு திரும்புவதை எதிர்நோக்குகிறேன். எனக்கு நீண்ட காலமாகிவிட்டது, இப்போது 3 மாதங்கள் என்னால் விளையாட முடியவில்லை, இத்தொடரின் மூலம் மீண்டும் நான் விரும்பியதைச் செய்ய விரும்புகிறேன். புதிய அடையாளம் மற்றும் புதிய குழுவுடன் ஒரு புதிய உரிமையுடன் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் அணி வீரர்கள் உண்மையில் இத்தொடரில் தங்கள் திறனை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளனர். மேலும் இத்தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என நம்புகிறேன். அடுத்து வரும் மூன்று வாரங்களை நினைத்து மிகவும் உற்சாகமாக உள்ளேன்” என்று தெரிவித்தார்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
நடப்பாண்டு சிபிஎல் தொடரில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் அணியை எதிர்கொள்கிறது. சிபிஎல் 2021 தொடரில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி சிறப்பாக செயல்பட கிரிக்க்கெட்ன்மோர் தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.