வெஸ்ட் இண்டீஸின் ஃபேண்டஸி லீக் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும், ஜமைக்கா தலாவாஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஜமைக்கா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளெட்சர் - எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லூயிஸ் 9 ரன்களிலும், ஃபிளெட்சர் 23 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கார்பின் போஷ், அம்பத்தி ராயுடு ஆகியோரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இருப்பினும் ஓரளவு தாக்குப்பிடித்த ஜூஷுவா டா சில்வா 36 ரன்களையும், ருதர்ஃபோர்ட் 16, ஜார்ஜ் லிண்டே 14, டோமினிக் டார்க்ஸ் 29 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பேட்ரியாட்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. ஜமைக்கா தரப்பில் சல்மான் இர்ஷத் 4 விக்கெட்டுகளையும், முகமது அமிர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜமைக்கா அணிக்கு கேப்டன் பிரண்டன் கிங் - கிர்க் மெக்கன்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக்கன்ஸி 23 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் பிராண்டன் கிங் அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த ஷமாரா ப்ரூக்ஸ் - அமிர் ஜாங்கோ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த ஷமாரா ப்ரூக்ஸ் 38 ரன்களையும், ஜாங்கோ 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் ஜமைக்கா தலாவாஸ் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சல்மான் இர்ஷத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News