சிபிஎல் 2023: பார்போடாஸை வீழ்த்தி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!

Updated: Thu, Sep 07 2023 15:16 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்போடாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. குயின்ஸ் பார்க் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டிரின்ப்கோ அணிக்கு தொடக்க வீரர் தேயல் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து வந்த நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி விரைவாக சேர்த்தார்.

இருப்பினும் மறுபுறம் சற்று தடுமாறிய மற்றொரு நட்சத்திர வீரர் மார்ட்டின் கப்தில் 5 பவுண்டரியுடன் 37 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் பொல்லார்ட் அவசரப்பட்டு 2 ரன்களில் ரன் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த லோர்கன் டக்கரும் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரான் அரை சதமடித்தார்.

அவரது அதிரடியால் ஒவ்வொருவருக்கும் 10 ரன்களுக்கு மேல் குவித்த டிரின்பாகோ அணிக்கு முக்கிய நேரத்தில் வந்த ஆண்ட்ரே ரஸல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 5ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 1 பவுண்டரி 4 சிக்சருடன் 39 ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அடம் பிடித்த நிக்கோலஸ் பூரான், கைல் மேயர்ஸ் வீசிய கடைசி ஓவரில் 86 ரன்களில் இருந்ததால் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அப்போது முதல் பந்திலேயே லெஃக் சைடு திசையில் அதிரடியான சிக்ஸர் பறக்க விட்ட அவர் அடுத்த பந்தில் மிட் விக்கெட் திசையில் சிக்சரை தெறிக்க விட்டார். அதே போல 3ஆவது பந்தில் ரன் எடுக்கவில்லை என்றாலும் 4ஆவது ஃபுல் டாஸ் பந்தில் பவுண்டரி அடித்த அவர் 100 ரன்களை தொட்டு சிபிஎல் தொடரில் தம்முடைய 2ஆவது சதமடித்து தம்முடைய ஹெல்மெட் மற்றும் பேட்டை தூக்கி எறிந்து வெறித்தனமாக கூச்சலிட்டு கொண்டாடினார்.

 

அந்த வகையில் 5 பவுண்டரி 10 சிக்சரை 192.45 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் 102 ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்ப்பிற்கு 208 ரன்களை எடுத்தது. பார்போடாஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகலை எடுத்தார். 

இதைத்தொடர்ந்து 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பார்போடாஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - ரகீம் கார்ன்வால் இணை களமிறங்கினர். இதில் கார்ன்வால் 4 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய லௌரி எவான்ஸ் 20, கேப்ட்ன் ரோவ்மன் பாவெல் 9 ரன்களுக்கும், அலிக் அதனாஸ் 7 ரன்களுக்கும், ஜேசன் ஹோல்டர் 19 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த கைல் மேயர்ஸ் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் உள்பட 70 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய வீரர்களாலும் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. நைட் ரைடர்ஸ் தரப்பில் அகீல் ஹொசைன், வக்கர் சலாம்கெய்ல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதனால் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் பார்போடாஸ் ராயல்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை