பவுண்டரி மழை பொழிந்த ரஹானே; வைரலாகும் காணொளி!

Updated: Sun, Apr 23 2023 22:52 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சென்னை தொடக்க வீரர்களாக கெய்குவாட், கான்வே களமிறங்கினர். கெய்குவாட் 35 ரன்களிலும், கான்வே 56 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். 

அடுத்து வந்த ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ருத்ர தாண்டவமாடினார். 24 பந்துகளில் அரைசதம் கடந்த ரஹானே சிக்சர்களாக பறக்க விட்டார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது. 

 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஜிங்கியா ரஹானே 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசிய ரஹானே 71 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கி விளையாடி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::