‘தோனி இல்லையெனில் நானும் இல்லை’ - வைரலாகும் ரெய்னாவின் கருத்து!

Updated: Sat, Jul 10 2021 12:10 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனுமானவர் சுரேஷ் ரெய்னா. இவருக்கு முன்னாள் கேப்டன் தோனிக்கும் இருக்கும் நட்பு அனைவரும் அறிந்த ஒன்றே.

இவர்கள் இருவரும் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடக்க சீசனிலிருந்தே விளையாடி வருகின்றன. இதனால் சென்னை அணி ரசிகர்களை தோனியை  ‘தல’ என்றும், சுரேஷ் ரெய்னாவை ‘சின்ன தல’ என்றும் செல்லமாக அழைப்பதும் வழக்கம். 

மேலும் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்த சில மணி துளிகளில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்து, தோனி உடனான தனது நட்பை வெளிப்படுத்தியிருந்தார். 

தற்போது அவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில், தனியார் தொலைகாட்சி நேர்காணலின் போது தொகுப்பாளர் சுரேஷ் ரெய்னாவிடம், தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் ஓய்வை அறிவித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினர். 

 

இதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா,“அடுத்த சீசனில் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தால் நானும் ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை. ஒருவேளை நடப்பு சீசனில் சிஸ்கே கோப்பையை வென்றால், நிச்சயம் நாங்கள் அவரை அடுத்த சீசனில் விளையாடவைக்க முயற்சி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

சுரேஷ் ரெய்னாவின் இக்கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை