ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Mar 19 2024 14:47 IST
Image Source: Cricketnmore

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களை கவரும் வகையில் நடப்பு சாம்பியனான மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல போராடிவரும் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறது. இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - எம்ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - இரவு 8 மணி

பிட்ச் ரிப்போர்ட்

பொதுவாக, சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த மைதானத்தின் ஆடுகளம் மெதுவாகவே உள்ளது. இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். போட்டி தொடர்ந்து நடக்கும் போது ஏற்கனவே வறண்டு இருக்கும் பிட்ச் கூடுதலாக மெதுவாகிறது. இதனால் இங்கு பேட்டர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். அதேசமயம் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் இங்கு சில நல்ல ஸ்கோர்களும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 170 ரன்களாக இருக்கிறது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 31
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 20
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 10
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, ஷிவம் தூபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், எம்எஸ் தோனி (கேப்டன்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டூ பிளெசிஸ் (கேப்டன்), ராஜத் பர்டிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கர்ண் சர்மா, ரீஸ் டாப்லி, முகமது சிராஜ், ஆகாஷ்தீப்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, ஃபாஃப் டூ பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), மொயீன் அலி, ரச்சின் ரவீந்திரா, கேமரூன் க்ரீன்
  • பந்துவீச்சாளர்கள் - ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்

CSK vs RCB IPL 2024 Dream11 Prediction, Today Match CSK vs RCB, CSK vs RCB Dream11 Team, Fantasy Cricket Tips, CSK vs RCB Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை