சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகாள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறிய நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 8 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்தில் தொடர்கிறது. இதன் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்தும் முதல் அணியாக வெளியேறியுள்ளது. இதனால் இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
அணியின் பேட்டிங்கில் உர்வில் படேல், அயூஷ் மாத்ரோ உள்ளிட்ட இளம் வீரர்களுடன் டெவால்ட் பிரீவிஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சில் நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மதீஷா பதிரானா ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், டெவால்ட் பிரீவிஸ், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, மத்திஷா பத்திரனா.
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 13 போட்டிகளில் 3 வெற்றி 9 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் அந்த அணி இழந்துள்ளது. இந்நிலையில் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் விளையாடும் அந்த அணி வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் லுஹான் ட்ரே பிரிட்டோரியஸுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் குவெனா மபாகா, ஃபசல்ஹக் ஃபருக்கி, ஆகாஷ் மத்வால் ஆகியோர் இருப்பது அணிக்கு சற்று நம்பிக்கை அளிக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மையர்/லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், வனிந்து ஹசரங்கா, குவெனா எம்பாகா, ஆகாஷ் மத்வால், துஷார் தேஷ்பாண்டே, ஃபசல் ஹக் ஃபரூக்கி.\
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 30
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 16
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 14
Also Read: LIVE Cricket Score
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்- உர்வில் படேல், சஞ்சு சாம்சன்
- பேட்ஸ்மேன்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (துணை கேப்டன்), ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே
- ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ரியான் பராக், வனிந்து ஹசரங்க
- பந்துவீச்சாளர்கள் – நூர் அஹமத், துஷார் தேஷ்பாண்டே/மதிஷா பத்திரனா.