ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 8ஆவது லீக் ஆட்டத்தில் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.   

Advertisement

இதையடுத்து களமிறங்கிய யுஏஇ அணிக்கு முகமது வசீம் - ரோஹன் முஸ்தஃபா இணை களமிறங்கினர். இதில் இருவரும் தலா 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த விருத்தியா அரவிந்த் - ரமீஸ் ஷஜாத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அரவிந்த் 49 ரன்களிலும், ஷஜாத் 38 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய அசிஃப் கான் 27 ரன்களிலும், பசில் ஹமீத் 8 ரன்களிலும், அலி நெசர் 5 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அஃப்சல் கான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். 

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி 227 ரன்களைக் குவித்தது. ஓமன் அணி தரப்பில் ஜெய் ஒடெட்ரா 3 விக்கெட்டுகளையும், பிலால் கான், ஃபையாஸ் பட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.   

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஓமன் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிரஜபதி 6 ரன்களிலும், ஜதிந்தர் சிங் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த அகிப் இலியாஸ் - ஷோயிப் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இலியாஸ் அரைசதம் கடந்த கையோடு 53 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஜீஷன் மக்சூத்தும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷோயிப் கான் அரைசதம் கடந்தார்.

அவருக்கு துணையாக விளையாடிய முகமது நதீமும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, ஓமன் அணி 46 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியையும் வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News