CWC 2023 Qualifiers: பால் ஸ்டிர்லிங் அபார சதம்; யுஏஇ-க்கு 350 டார்கெட்!

Updated: Tue, Jun 27 2023 16:48 IST
CWC 2023 Qualifiers: Paul Stirling's big hits in the end help Ireland set a massive target for UAE! (Image Source: Google)

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் 20ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - அண்டி மெக்பிரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 24 ரன்களில் ஆண்டி மெக்பிரையன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஸ்டிர்லிங்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பால்பிர்னியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பால் ஸ்டிர்லிங் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 14ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். அதேசமயம் மறுபக்கம் கேப்டன் பால்பிர்னி  66 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பால் ஸ்டிர்லிஙும் 8 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் 162 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஹாரி டெக்டரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 சிக்சர்கள், 4 பவுண்டரி என 57 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய லோர்கன் டக்கர் 19 ரன்களையும், ஜார்ஜ் டக்ரேல் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு உதவினர். 

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களைக் குவித்தது. ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் சன்ஷித் சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து கடின இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை