ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

இப்போட்டியில் டாஸிஅ இழந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 282 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் மட்டுமே அரை சதம் கடந்து ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் மற்ற எல்லோரும் அவர்களுடைய வழக்கமான பாணியில் அதிரடியாக விளையாட போய் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.

Advertisement

இதன் காரணமாக இறுதியில் அடித்து விளையாடுவதற்கு சரியான சூழல் அமையாமல் இங்கிலாந்து சிக்கிக் கொண்டது. ஆடுகளம் பேட்டிங் செய்ய வசதியாக இருந்தது. மேலும் இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது அதைவிட ஆடுகளம் வசதியாக இருந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவரும் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கி எடுத்து விட்டார்கள். இருவரும் சதத்தை எட்டி 36.2 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்துக்கு வெற்றியையும் கொண்டு வந்தார்கள்.

தோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், “இது ஏமாற்றம் அளிக்கும் நாள். நியூசிலாந்து விளையாடிய விதத்தில் வந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிக நீண்ட தொடரில் ஒரு தோல்வி. எங்கள் அணியின் வீரர்கள் இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். இதற்கு முன்பு நாங்கள் எதிரணிகளை இப்படித்தான் தோற்கடித்திருக்கிறோம். 

இப்பொழுது அதே வகையில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். அவர்கள் பெற்ற தொடக்கத்திற்கு மேற்கொண்டு அழுத்தத்தை உருவாக்குவது கடினம். நாங்கள் இதை பாசிட்டிவாக எடுத்துக் கொள்வோம். நாங்கள் எதற்காக மிகவும் தற்காப்பாக செல்ல மாட்டோம். ஆனால் நாங்கள் ஷாட் தேர்வு செய்வதில் சரியாக இருக்க வேண்டும். இந்த ஆடுகளத்தில் தவறு செய்வதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருந்தது. 

அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். பேட்டிங் செய்வது விளக்குகளின் கீழ் இன்னும் நன்றாக இருந்தது. இதனால்தான் நாங்களும் முதலில் பந்து வீச விரும்பினோம். ஜோ ரூட் பற்றி எந்த கேள்வியும் கிடையாது. அவர் பழைய நிலைக்கு வந்து விட்டார். அவர் எந்த வடிவத்தில் விளையாடினாலும் அவர் தான் ரன் மேக்கர். பென் ஸ்டோக்ஸ் பிசியோ உடன் கடுமையாக உழைத்து வருகிறார்” என்று கூறியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News