காமன்வெல்த் 2022: ஆலிஸ் கேப்சி அரைதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 168 டார்கெட்!

Updated: Tue, Aug 02 2022 17:00 IST
Image Source: Google

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளின் நடப்பாண்டு சீசன் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்ம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 24 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறை மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி, தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் சோபிய டாங்க்லி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டேனியல் வையட் - ஆலிஸ் கேப்ஸி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் டேனியல் வையட் 27 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஆலிஸ் கேப்ஸி அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நடாலி ஸ்கைவர் 12, மியா பௌச்சர் 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த எமி ஜோன்ஸ் - கேத்ரின் பிரண்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவனெ உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எமி ஜோன்ஸ் 36 ரன்களையும், கேத்ரின் பிரண்ட் 38 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஷப்னைம் இஸ்மெய்ல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை