காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளின் நடப்பாண்டு சீசன் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்ம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 24 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறை மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

Advertisement

இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி, தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.

Advertisement

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் சோபிய டாங்க்லி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஆலிஸ் கேப்ஸி அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். 

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த எமி ஜோன்ஸ் - கேத்ரின் பிரண்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவனெ உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு அன்னேக் போஷ் - டஸ்மின் ப்ரிட்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போஷ் 32 ரன்களிலும், ப்ரிட்ஸ் 38 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர்.

பின்னர் களமிறங்கிய லாரா வோல்வார்ட்டும் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய வீராங்கனைகளாலும் இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியால் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்க்கமுடிந்தது.

Advertisement

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News