எல்லாம் சரிதான், ஆனால் ஐசிசி தொடரை கூட இந்தியாவில் வெல்ல முடியவில்லை - டேரன் சமி
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளை வென்ற நிலையில், டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா நகரில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி இந்திய அணியின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி பற்றியும் இளம் வீரர்களான ஜெய் ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் பற்றியும் பேசியிருக்கிறார் . மேலும் இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி போட்டி தொடர்கள் எதையும் வெல்லவில்லை என்பதையும் குறிப்பிட்டு இந்திய அணியை சீண்டி இருக்கிறார்.
இந்தியா கடைசியாக 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. அதன் பிறகு கடந்த 10 வருடங்களில் ஒரு ஐசிசி போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டங்களில் நான்கு டி20 உலக கோப்பைகள் இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஒரு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை என ஏழு தொடர்களில் தோல்வியை சந்தித்து இருக்கிறது .
இதுகுறித்து பேசிய டேரன் சமி, “இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா, ஜெய்ஸ்வால் போன்றவர்களை பாருங்கள். அவர்கள் எவ்வளவு தரமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார்கள். மேலும் ஷுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது திறமையை காட்டுகிறார்கள்.
ஹர்திக் பாண்டியா இளம் வீரராக இருந்தாலும் அவருக்கு ஏழு முதல் எட்டு வருட சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இருக்கிறது. இவையெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்றால் அதற்கு காரணம் இந்திய அணியின் முதல் தர கிரிக்கெட் தான். அவர்களிடம் தரமான டொமஸ்டிக் கிரிக்கெட் இருக்கிறது . அதனால்தான் இது போன்ற திறமையான வீரர்களை உருவாக்க முடிகிறது . ஆனாலும் அவர்களால் கடந்த 10 வருடங்களில் ஒரு ஐசிசி சர்வதேச கிரிக்கெட் தொடரை கூட வெல்ல முடியவில்லை.
இந்த சுற்றுப்பயணத்தின் போது அறிமுகமான ஜெய்ஸ்வால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் 9 முதல் தர போட்டிகளை விளையாடி இருக்கிறார். அதில் ஒன்பது சதங்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே 171 ரன்கள் எடுத்து தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். அவருடைய ஆடுவதை பார்க்கும் போது சர்வதேச கிரிக்கெட்டிற்காகவே உருவான வீரர் போன்று இருக்கிறார் . ஒரு அறிமுக வீரர் டெஸ்ட் போட்டியை விளையாடுவது போன்று இல்லை . இதுதான் இந்தியா அணியின் முதல் தர கிரிக்கெட்டின் தரம்” என பாராட்டி இருக்கிறார்.