மஹேலா ஜெயவர்தனே சாதனையை முறியடித்த தசுன் ஷனகா!
Dasun Shanaka Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் மஹேலா ஜெயவர்தனேவின் சாதனையை தசுன் ஷனகா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் பதும் நிஷங்கா 46 ரன்களையும், தசுன் ஷனகா 35 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதல் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் பர்வேஸ் ஹொசைன் ரன்கள் ஏதுமின்றியும், லிட்டன் தாஸ் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தன்ஸித் ஹசன் 73 ரன்களையும், தாவ்ஹித் ஹிரிடோய் 27 ரன்களையும் சேர்க்க வங்கதேச அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் தசுன் ஷனகா சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 35 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இலங்கை வீரர்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
முன்னதாக மஹேலா ஜெயவர்தனே 55 டி20 போட்டிகளில் 1493 ரன்களைச் சேர்த்து இலங்கை அணிக்காக அதிக ரன்களைக் குவித்த 5ஆவது வீரராக இருந்தார். ஆனால் தற்சமயம் தசுன் ஷனகா 105 போட்டிகளில் விளையாடி 1511 ரன்களைச் சேர்த்து 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் குசால் பெரேரா 80 போட்டிகளில் 2080 ரன்களைக் குவித்து முதலிடத்திலும், குசால் மெண்டிஸ் 81 போட்டிகளில் 2007 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், திலகரத்னே தில்ஷன் 1889 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இலங்கை வீரர்கள்
- குசல் பெரேரா - 80 போட்டிகளில் 2080 ரன்கள்
- குசல் மெண்டிஸ் - 81 போட்டிகளில் 2007 ரன்கள்
- திலகரத்னே தில்ஷன் - 80 போட்டிகளில் 1889 ரன்கள்
- பதும் நிசங்க - 65 போட்டிகளில் 1854 ரன்கள்
- மகேல ஜெயவர்தனே - 55 போட்டிகளில் 1493 ரன்கள்
- தசுன் ஷனகா - 105 போட்டிகளில் 1511 ரன்கள்