சேவாக்கின் சாதனையை முறியடித்த டேவிட் மில்லர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இப்போடியில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் சதமடித்து அசத்தியதன் மூலம் சிறப்பு சாதனைகளை படைத்துள்ளார். மேற்கொண்டு இந்த சதத்தின் மூலம் அவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்து அசத்தியுள்ளார்.
சேவாக், இங்கிலிஸ் சாதனை முறியடிப்பு
நியூசிலாந்துக்கு எதிராக 6ஆவது இடத்தில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் 67 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த பேட்டர் எனும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் தலா 77 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.
ஐசிசி நாக் அவுட் போட்டியில் மில்லரின் சாதனை
பொதுவாக தென் ஆப்பிரிக்க அணி பெரும்பாலும் ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போன்ற பெரிய போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதில்லை. இந்த போட்டிகளில் அந்த அணியின் புள்ளிவிவரங்கள் மிகவும் மோசமாக உள்ளன. அதேசமயம் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் மில்லரின் ஃபார்ம் என்பது அபாரமானதாக உள்ளது. அதன்படி அவர் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களை விளாசியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் நாக் அவுட்டில் டேவிட் மில்லர்
- 56*(51) எதிராக இங்கிலாந்து, ஓவல், சாம்பியன்ஸ் கோப்பை 2013 அரையிறுதி
- 49(18) vs நியூசிலாந்து, ஆக்லாந்து, உலகக் கோப்பை 2015 அரையிறுதி
- 101(116) எதிராக ஆஸ்திரேலியா, கொல்கத்தா, உலகக் கோப்பை 2023 அரையிறுதி
- 100*(67) vs நியூசிலாந்து, லாகூர், சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூநிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 362 ரன்களைச் சேர்த்த நிலையில், அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 312 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.