எங்களின் அணியின் சிறந்த காம்பினேஷனை சரியான நேரத்தில் கண்டறிந்துள்ளோம் - டேவிட் வார்னர்!

Updated: Sun, May 07 2023 13:09 IST
David Warner Revealed Our Intention Was To Take On Mohammed Siraj (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில்  நேற்று நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி விராட் கோலி, மஹிபால் லோமரோர் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. இதியடுத்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிலிப் சால்ட்டின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 16.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றிபெற்றது .

இந்த வெற்றி குறித்து பேசிய டேவிட் வார்னர், “ஆர்சிபி அணி சராசரிக்கும் அதிகமான ரன்களை இலக்காக நிர்ணயித்துவிட்டது என்று நினைத்தோம். ஆனால் பந்து அதிகமாகவே வழுக்கியது. அதேபோல் சால்ட் அதிரடி டெல்லி அணியின் வெற்றிக்கு பாதை வகுத்து கொடுத்தது. முகமது சிராஜ் பந்துவீச்சில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக இருந்தது. 

ஏனென்றால் சிறப்பாக அவர் பந்துவீசி வருவதோடு, பவர் பிளேவில் தேவையான விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுகிறார். அதுமட்டுமல்லாமல் முகமது சிராஜின் விக்கெட்டுகள் எதுவும் கேட்ச் மூலமாக வருவதில்லை. அனைத்தும் போல்ட் அல்லது எல்பிடபிள்யூ மூலமாகவே கிடைக்கிறது. அதனால் அவரது லெந்த்தை மாற்ற நினைத்தோம். அதேபோல் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். 

சொந்த காரணங்களால் நோர்ட்ஜே சொந்த ஊர் திரும்பியுள்ளார். அவர் இல்லாததால் இஷாந்த் சர்மா பந்துவீச்சாளர்களை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். எங்களின் அணியின் சிறந்த காம்பினேஷனை சரியான நேரத்தில் கண்டறிந்துள்ளோம். அடுத்த போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள வேண்டும். அது சுலபமாக இருக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை