ஐபிஎல் 2021, தகுதிச்சுற்று 1 : டெல்லி vs சென்னை - உத்தேச அணி!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் தற்போது பிளே ஆஃப் சுற்றில் விளையாட இருக்கின்றன.
அதன்படி இன்று நடைபெற இருக்கும் முதல் தகுதிச்சுற்று (குவாலிபயர் 1) போட்டியில் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் டெல்லி அணியும், இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால் இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று தெரிகிறது.
அதே வேளையில் தோல்வியடையும் அணி மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்று இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் விளையாடும். ஆனாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லவே இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கத்தை செலுத்தி வரும் இரு அணிகளாக பார்க்கப்படும் டெல்லி மற்றும் சென்னை அணிகள் இப்போட்டியில் மோதுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஏனெனில் ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வந்த இரு அணிகளும், இரண்டாம் பாகத்தில் மிடில் ஆர்டர் பிரச்சினை காரணமாக தற்போது சரிவைக் கண்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்
டெல்லி கேப்பிட்டல்ஸ்- பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கே), ரிபால் படேல், ஷிம்ரான் ஹெட்மையர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நோர்ட்ஜே.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
சென்னை சூப்பர் கிங்ஸ்- ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.