ஐபிஎல் 2023:டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Apr 04 2023 12:13 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடைபற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாட உள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் இப்போட்டியானது டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் -  அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி தனது முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வியடைந்தது. கேப்டன் வார்னர் தவிர்த்து மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் பேட்டிங்கில் சொதப்பினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார். தற்போது சொந்த மண்ணில் குஜராத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

டெல்லி அணியின் பலவீனமே அதன் பந்துவீச்சாளர்கள் தான். இந்திய பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்று தேடி தேடி வாங்கிய சேத்தன் சக்காரியா, முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோரிடம் போதுமான வேகமோ, ஸ்விங்கோ இல்லை. இதனால் கடந்த போட்டியில் லக்னோ அணிக்கு எந்த அச்சுறுத்தலையும் டெல்லி அணியால் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர்களான அன்ரிச் நோர்ட்ஜே, இங்கிடி நேற்று டெல்லி அணியுடன் இணைந்தனர்.

இதனால் அவர்கள் உடனடியாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் தங்களின் வேட்டையை சொந்த மண்ணில் தொடங்க காத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், இந்தப் போட்டியை நேரில் காண வருவதாக டெல்லி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காயமடைந்த தங்கள் கேப்டனுக்கு உற்சாகம் கொடுக்க, குஜராத் அணியை வீழ்த்த கடுமையாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தி கம்பீரமாக உள்ளது. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடர் தான் குஜராத் அணிக்கு உண்மையான சோதனை கொடுத்துள்ளது. வெவ்வேறு மைதானங்களில் குஜராத் அணி விளையாட உள்ளதால், அந்த அணியின் முழுமையான திறன் என்னவென்பது இந்த ஐபிஎல் தொடரில் தான் தெரிய வரும். இருப்பினும் பேட்டிங், பவுலிங் என்று சமபலத்துடன் உள்ள குஜராத் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.

கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகி இருந்தாலும், நேற்று குஜராத் அணியுடன் டேவிட் மில்லர் இணைந்துள்ளார். இதனால் வில்லியம்சன் இடத்தில் மில்லர் வரப்போவது உறுதி. அதேபோல் ஷுப்மன் கில், சாஹா, சாய் சுதர்சன், மில்லர், ஹர்திக் பாண்டியா, திவேத்தியா என்று மரண மாஸ் பேட்டிங் ஆர்டரை குஜராத் அணி வைத்துள்ளது. அதேபோல் வேகத்திற்கு ஷமி, சுழலுக்கு ரஷீத் கான் என்று இரு தரமான பந்துவீச்சாளர்களோடு, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், ஜோஷ் லிட்டில் ஆகியோர் இணைந்திருப்பது கூடுதல் பலம் தான்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 01
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 0
  • குஜராத் டைட்டன்ஸ் -01

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ் - டேவிட் வார்னர் (கே), பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்பராஸ் கான், ரோவ்மன் பவல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, முகேஷ் குமார்.

குஜராத் டைட்டன்ஸ் – விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், டேவிட் மில்லர்/மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கே), விஜய் சங்கர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - விருத்திமான் சாஹா
  • பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், ஷுப்மான் கில், பிரித்வி ஷா, ரைலீ  ரூஸோவ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, மிட்செல் மார்ஷ், அக்சர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - ரஷித் கான், முகமது ஷமி, குல்தீப் யாதவ்

கேப்டன்/துணைக்கேப்டன் தேர்வு - ஷுப்மான் கில், டேவிட் வார்னர், ஹர்திக் பாண்டியா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை