மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டோட்டின்!

Updated: Thu, Aug 29 2024 22:14 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றிருந்த தியான்ட்ரா டோட்டினிற்கு இடம் கிடைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டாட்டின் கடந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

மேலும் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரரான தியான்ட்ரா டோட்டின், எதிர்வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை கணக்கில் கொண்டு அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்ற நிலையில், தற்சமயம் உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இது அந்த அணிக்கு கூடுதல் வலிமையை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேற்கொண்டு, ஹீலி மேத்யூஸ் தலைமையிலான இந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஸ்டேஃபானி டெய்லர், ஷெர்மைன் காம்பெல், ஷமில கன்னெல் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளுடன், சில இளம் வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது அடுத்த கோப்பைக்காக தீவிரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி: ஹீலி மேத்யூஸ் (கே), ஷெர்மைன் காம்ப்பெல்லே, ஆலியா அலீன், அஃபி பிளெட்சர், அஷ்மினி முனிசார், செடியன் நேஷன், சினெல்லே ஹென்றி, டியான்ட்ரா டோட்டின், கரிஷ்மா ராம்ஹராக், மாண்டி மங்ரு, நெரிசா கிராப்டன், கியானா ஜோசப், ஷமிலா கானல், ஸ்டேஃபானி டெய்லர், ஜைடா ஜேம்ஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை