இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இதில் இரு அணிக்கும் வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படுகிறது.

Advertisement

ஏனெனில் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடிய 13 போட்டிகளில் 7 வெற்றி 6 தோல்விகளுடன் 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ளது. அதேசமயம் ஆர்சிபி அணியானது இந்த சீசனில் விளையாடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலின் 6ஆம் இடத்தில் தொடர்கிறது. ஒருவேளை இப்போட்டியில் ஆர்சிபி அணி நல்ல ரன் ரேட்டில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் காயத்தை சந்தித்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் தீபக் சஹார் முதல் ஓவரில் இரண்டு பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். அதன்பின் அவர் காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளை தவறவிட்டார்.

 

மேலும் தீபக் சஹாரின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து அவர் விலகக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்றைய தினம் தீபக் சஹார் வலைபயிற்சியில் ஈடுபட்ட காணொளியை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அவர் நாளை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News